Sunday, October 5, 2014

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்





       இந்த  கோவில்  தேனி  மாவட்டம்  ஆண்டிபட்டியில் மெயின்
 கடைவீதியில் அமைந்துள்ளது , பாண்டியர்கள் காலத்து கோயிலான இந்தக்கோயிலில் பிரமாண்டமான  ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது .

மூலவர் சுந்தரேஸ்வரர் கிழக்கு பார்த்தும், அம்மன்
 மீனாட்சி தெற்குதிசை நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். 
கோயில்  பிரகாரத்தில் கோடி விநாயகர்,  சந்தான விநாயகர், நாகர், 
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, முருகர் 
சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர், அடுத்து
  சூரியன் சந்திரன் அருகே அருகே ஒரே திசை பார்த்து  தனித்தனி 
சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். 

குழந்தை பிறந்து, பிறந்துஇறக்கும் தோஷம் உளளவர்கள், 
இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம்
 செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி
 பிறந்த குழந்தைகள் இறக்காது என்று கூறுகின்றனர,
மதுரை  மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில்
 பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.
இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து 
வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது . இந்த  சமாதிக்கு மேல் 
இத்தலத்தின் விருட்சமான வில்வமரம்  அமைந்துள்ளது.  தீராத  
நோய்களால் அவதிப்படுபவர்கள்  இத்தலவிருட்சத்தின்  கீழ்  
தரப்படும் விபூதியை  பூசினால்  நாள்பட்ட  நோய்கள்  விரைவில் குணமாகிவிடும்.

 வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில்இங்குள்ள
 வெள்ளி ''வேலுக்கு''சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. 
இந்தவழிபாட்டில்  கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம்
 பெருகும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் திருமணம் செய்துகொண்டால் வாழ்வில் எந்தவித
 குறைபாடும் இன்றி திருப்தியாகவாழலாம் என்பதால் 
 பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், 
இத்தலத்திற்கு ஆண்டிபட்டி என்ற பெயர் ஏற்பட்டதாக
 தலவரலாறு கூறுகிறது.  

இங்கு சிவனின் பின்புறம் உள்ளலிங்கோத்பவரின் அருகே பிரம்மா,
 விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த இடத்தில் நின்று 
தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் 
அருளும் ஒன்றாக கிடைக்கும்

No comments:

Post a Comment