துர்க்கை அம்மனின் 
கைககளில்  உள்ள ஆயுதங்களுக்கான அர்த்தங்கள்!!!


இந்து புராணத்தில் புகழ் பெற்ற கடவுளாக விளங்குகிறார் துர்க்கை அம்மன். இக்கடவுள் பத்து கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மூன்று கண்களுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் தோரணையில் காட்டப்பட்டுள்ளார். 

மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பார்க்கப்படும் துர்க்கை படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற அனைத்து செயல்களையும் வழி நடத்துகிறார். துர்கா என்ற வார்த்தைக்கு 'வெல்ல முடியாத' என்ற அர்த்தமாகும். 

மனிதர்களின் கவலைகளையும், துன்பங்களையும் போக்குபவராக விளங்குகிறார் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனின் பத்து கைகள் மற்றும் அதில் இருக்கும் பத்து விதமான ஆயுதங்கள் தான் முதலில் கவனத்திற்கு வரும். 

கடவுளின் இந்த பத்து கைகள் அனைத்து மக்களின் ஆவலை தூண்டும் ஒரு விஷயமாகும். துர்க்கை அம்மனுக்கு ஏன் பத்து கைகள் உள்ளதென்றும் அது எதனை குறிக்கிறது என்றும், பொதுவாக குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்பார்கள். 

துர்க்கை அம்மனின் பத்து கைகள் எதனை குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். துர்க்கை கையில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் ஒவ்வொன்றை குறிக்கும்.