Wednesday, October 8, 2014

சனீஸ்வரன்

தென் காளஹஸ்தி சிவாலயத்தில் சனீஸ்வரராக வீற்றிருக்கும் சனீஸ்வர பெருமான் கொடூர பார்வையில் இருந்து விலகி சுப பார்வையை அளிக்கிறார் திரு நள்ளாறுக்கு செல்ல முடியாமல் ஏங்கும் மக்களுக்காக அவர் இங்கேயே அருள் பாலிக்கிறார் . ஒரு முறை இந்த தென் காளஹஸ்தி சிவாலயத்தை கட்ட வேண்டும் அதற்கு சனீஸ்வரர் உதவி வேண்டும் என்பதற்காக இந்த ஆலய நிர்மானிப்பில் உள்ள ஒருவர் திருநள்ளாறு சென்று அங்குள்ள சனீஸ்வரர்ரிடம் தனது கஷ்டங்களை நீக்கி சிவன் கோயில் கட்ட உதவி செய்ய வேண்டும் என சனீஸ்வரரிடம் வேண்டிய போது " என்னருள் இல்லாமல் எவர் ஒருவரும் சிவாலயத்தை எழுப்ப முடியாது" என அவர் அருகில் நின்ற பக்தர்களில் ஒருவர் அவரறியாமல் சனீஸ்வரர் சன்னதியில் உறக்க கூறியதை அதையே வேத வாக்காக எடுத்து திரு நள்ளாறு சனீஸ்வரரை பிரதிஷ்டை செய்யபட்டது . இங்கு சனி கிழமை தோறும் 5 வகை அபிஷயங்களுடன் செவ்வந்தி மாலையும் செவ்வரளி மாலையும் சாத்தி வழிபாடு செய்ய படுகிறது , இங்கு ஏழரை சனி, அஷ்டம சனி , அர்தாஷ்டம சனி திசை நடபவர்களும் மரண பயம், கணவன் மனைவி சண்டை , பிரிவினை, தொழில் முடக்கம், அதிக நஷ்டம், சொத்து சண்டை வில்லங்கம் ஆகியவற்றால் கஷ்டப்பட்டவர்கள் சனி கிழமை தோறும் செவ்வரளி மாலை சாத்தி எள்ளு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் கரைந்தோடும்.  

No comments:

Post a Comment