தோஷம் நீக்கும் பெருமாள்
ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் கோவில் சென்னை நங்க நல்லூரில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சிறப்பு என்னவென்றால் இங்கு மூலவர் பிரகாரத்தில் ராகு, கேது கிரகங்களுக்கு இடையே ஏனைய ஏழு கிரகங்களும் இருக்கின்றன.
இப்படி இருப்பது 'கால சர்ப்ப தோஷம்' எனப்படும். ஜாதகத்தில் அவ்வாறு தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
மேலும் இந்த கோவிலில் கால சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் கால சர்ப்ப பூஜை வாரம் தோறும் செய்யப்படுகிறது.
அன்றைய தினத்தில் கால் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டால் தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு குறையும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment