Wednesday, October 8, 2014

ராகுவிற்குரிய பொது பரிகாரம்

ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனிப் பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு.
   தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படித்து வர வேண்டும்.
   தினசரி அரசு வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர் நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்
  துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
   நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9இ 27இ 108இஎன சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
  ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லிவர வேண்டும்.

கேது பகவானுக்குரிய தோஷ பரிகாரங்கள்

கேது பகவானுக்கு பரிகாரமாக இராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோயில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
   வெள்ளியில் ஜந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.
   கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
   குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
   அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு நாகருக்கு பால் ஊற்றி மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும் மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும் அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
   கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

கேது காயத்ரி

ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்.

கேது ஸ்லோகம்

புலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம்கேதும் ப்ரணமாம்யஹம்
  இந்த மந்திரங்களை காலை மாலை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதை அலையவிடாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து 108 முறை சொல்வது விசேஷ பலனைத் தரும்.
   கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள் கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு வேம்பு விநாயகர் நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம். 
   கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.
   மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.
   கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்

No comments:

Post a Comment