Sunday, October 5, 2014



தடைபட்ட திருமணம் நடக்க திருநல்லம் கோவில் வழிபாடு
முக்கண்ணன் உமா மகேஸ்வரராய் மேற்கு நோக்கி வீற்றிருக்க, அங்கவள நாயகியாய் அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். 

பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக்கோயில் இது. இத்தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். 

எனவே இந்த கோவிலுக்கு திருமணம் தடைபடுபவர்கள் வந்து பரிகாரம் செய்து கொள்கிறார்கள். திருமணம் நடந்தவுடன் தம்பதி சகிதமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் என இத்தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். 

இத்தலத்தில், நோய் தீர்க்கும், ஸ்ரீ வைத்திய நாதர் சந்நதியும் அமைந்துள்ளது. இத்தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

No comments:

Post a Comment