கொழுவூர் ஆதிநாகநாதர் திருக்கோயில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சலிங்க ஸ்தலங்கள் உள்ளன.
1) எமனேஸ்வரம் - எமனேஸ்வரத் திருக்கோயில்
2) சாலைக்கிராமம் திருக்கோயில் - வரகனேஸ்வரத் திருக்கோயில்
3) முக்கூட்டுச்சாலை - குணதீஸ்வரர் திருக்கோயில்
4) நயினார் கோயில்
5) கொழுவூர் நாகநாதர் கோயில் ஆகியவை அவை.
கொழுவூர் நாகநாதர் திருக்கோயிலில் கூண் பாண்டிய மன்னனுக்கு கூண் நிமிர்ந்தது. எனவே அவ்விடத்தில் கோயில் கட்ட தீர்மானித்து குளம் வெட்டினார்.
முசுகுந்த சக்ரவர்த்தி இத்தலத்தில் கோயில் கட்டினார்.
இக்கோயிலைச் சுற்றி விவசாயிகளே அதிகம். அவர்கள் தங்கள் வயலில் விளைந்த கீரை காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்காவிடில் அந்த வீடுகளுக்கு பாம்பு சென்று விடுமாம். அடுத்தநாளே அவர்கள் கோயிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி விடுவார்கள். பாம்பால் யாருக்கும் தீங்கு விளையவில்லை என்பதே விசேஷம்.
இங்குள்ள புற்றிலிருந்து ஏராளமாக மண் கொட்டுகிறது. இதனை உடனுக்குடன் சுத்தம் செய்து விடுகிறார்கள். புற்று உடைந்துபோய் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் தரும் முட்டையை இரவு 7 மணிக்கு மேல் மொத்தமாக படைத்து விட்டு நடையை அடைத்துவிடுகிறார்கள். இதன் பிறகு யார் வந்தாலும் நடை திறக்கப்படமாட்டாது. மறுநாள் நடை திறந்தவுடன் முட்டைகள் உடைந்து கிடக்கின்றன. இக்கோயில் 6 மணி முதல் திறந்திருக்கும் பக்தர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நடைதிறந்து இருக்கும் சர்பதோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வந்து வழிபடுகிறார்கள்.

இருப்பிடம்:
பரமக்குடியிலிருந்து நயினார் கோயில் வரை சென்று அங்கிருந்து பிகொடிக்குளம் பொட்டகவயல் கிராமங்கள் வழியாக கோமூவூர் அடையலாம். நயினார் கோயிலிருந்தும் ஆட்டோ (அ) கார் முலம் இவ்வூர் வரலாம்.
No comments:
Post a Comment