நவக்கிரக தலங்களில் கீழப்பெரும்பள்ளம்
கேது பகவான் திருக்கோயில்
இருப்பிடம்
சீர்காழியில் இருந்து 22 கி.மீ தூரத்தில் கீழ்ப்பெரும்பள்ளம் திருக்கோயில் அமைந்து உள்ளது. பஸ் வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.
போன் - 04364 – 260051 260582, 9443564642
தல வரலாறு
இக்கோயிலில் கேதுபகவான் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி. பாம்பு தலையுடன் சிம்ம பீடத்தில் இருகை கூப்பி நின்ற கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.கலை மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற குடும்ப விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்ளலாம். நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும் பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வாளி மலர் வைத்து கொள்ளு சாத நைவேத்யம் படைத்து ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம். இவரே இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனும் சனீஸ்வரரும் மட்டுமே இருக்கின்றனர்.
ஹோமம் ஏற்பாடு
கேது பெயர்ச்சியின் போது இக்கோயிலில் விசேஷ ஹோமம் நடக்கிறது. இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே ஹோமத்தின் போது கும்பத்திற்கு 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி பின்பு கொள்ளு தானியம் கொள்ளினால் செய்யப் பட்ட பாயாசம் சூர்ணம் வடை சாதம் பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். அப்போது 70 ஆயிரம் முறை இவரது மூல மந்திரம் சொல்லப்படுகிறது. அதன்பின் 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. அன்று கேது உற்சவர் சிம்மவாகனத்தில் எழுந்தருளி மூன்று முறை நாகநாதரை சுற்றி வருகிறார்.
வழிபாடு
இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும் கொள்ளுப்பொடி உப்பு மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும் பலவண்ண வஸ்திரம் சாத்தியும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். இதற்கு ரூ.75 கட்டணம் சனி திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இதுவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு ரூ.450 ஹோமத்திற்கு ரூ.3 ஆயிரத்து 500 கட்டணமாக வசூலிக்கின்றனர். தொழில் வியாபாரம் சிறக்கவும் வழக்கு தம்பதியர் பிரச்சனை மரணபயம் நரம்பு வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment