நவக்கிரக தலங்களில் ராகுவிற்கு உரியதாகிய
திருநாகேஸ்வரம் நாகநாதர் திருக்கோயில்
தல வரலாறு
சுசீல முனிவரின் மகன் சுகர்மனை நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் தக்ககனை மானிடனாக பிறக்கும்படி சாபம் கொடுத்தார்;. இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற காசிபர் என்ற முனிவரிடம் வழி கேட்டான். அவர் பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி தக்ககன் பூமிக்கு வந்து லிங்க பூஜை செய்தான். அவனுக்கு காட்சி தந்த சிவன் சாபவிமோசனம் அளித்தார். இதனால் சிவனுக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
பாம்புடன் சம்பந்தப்பட்ட கோயில் என்பதால் நவக்கிரஹங்களில் ஒருவரான ராகு இத்தலத்தில் சிவனை வழிபட தன் தேவியருடன் வந்தார். இத்தலத்தின் அழகில் மயங்கி இங்;கேயே மனைவியருடன் தங்கி விட்டார்.
பிற்காலத்தில் ராகுவுக்கு அவரது மனைவியருடன் இணைந்திருக்கும் அனுக்கிரஹ மூர்த்தியாக சிலை வடிக்கப்பட்டு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மங்களராகு
இங்கே ராகு “மங்கள ராகு”வாக அருளுகிறார். பொதுவாக ராகு மனித தலை நாக உடலுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் முழுமையாக மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். இவருடன் நாகவல்லி நாககன்னி என்ற தேவியர் உள்ளனர்.
பாலாபிஷேகம்
நாகதோஷம் உள்ளவர்கள் ராகுவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அப்போது பால் லேசான நீலநிறத்தில் மாறும். தினமும் காலை 9.30 11.30 மாலை 5.30 மற்றும் ராகு காலங்களில் பாலாபிஷேகம் நடக்கிறது. இதற்கு கட்டணம் ரூ.65 செலுத்தி பாலாபிஷேகம் செய்து கொள்ளலாம்.
இருப்பிடம்
நடைதிறப்பு – காலை6.00- 12.45மணி , மாலை 4.00- 8.30மணி
போன் - 0435- 2463354, 9443489839
ராகு பகவான் துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப் போகும் அக்காலை உன்றன் புனற்பினாற் சிரமே யேற்று பாகுசேர் மொழியான் பங்கன் பரன்கையில் மீண்டும் பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
No comments:
Post a Comment