Wednesday, October 8, 2014

திருவிடைக்கழி அருள்மிகு முருகன் திருக்கோயில்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் தில்லையாடியில் இருந்து 2 கி.மீ தொலைவில் திருவிடைக்கழி என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்தும் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
   தல விருட்சம் சிறப்பாக அமைந்த திருத்தலங்களுள் திருவிடைக்கழி சிறப்பான ஸ்தலமாகும்.
   இத்தலத்தின் தலவிருட்சம் குராமரம் திருவிடைக்கழியை நாகதலம் என்னும் புராணம் கூறுகிறது. முருகப் பெருமான் இத்தலத்தில் சிவபிரானை வழிபட்டார். மேலும் முருகனை ராகுபகவான் வழிபட்ட தலமாகும்.
   “குரா” என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும் ராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறலாம்.
   இத்தலத்தில் நவகோள்களின் நாயகனாக முருகன் விளங்குவதால் இங்கு நவக்கிரஹ சன்னதி கிடையாது.

No comments:

Post a Comment