காஞ்சிபுரம் சித்ரகுப்தன் திருக்கோயில்
கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தன். கேது மோட்சகாரகன் என்று பெயர். எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தனுக்கு யார் யார் மோட்சம் புகுவார்கள் என்கிற கணக்;குத் தெரியும். எனவே சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். இவருக்கு காஞ்சிபுரம் அருகே தனி ஆலயம் உள்ளது. இங்கு சென்று கொள்ளு 200 கிராம் உளுந்து 200 கிராம் சித்திரவண்ணத் துணி ஒன்றரை மீட்டர் வைத்து அர்ச்சனை செய்து துணியை ஆலயத்திலேயே அர்ப்பணித்துவிட்டு உளுந்தையும் கொள்ளையும் பால்தரக்கூடிய பசுவுக்குக் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் செய்வதால் ராகு –கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment