Wednesday, October 8, 2014

காஞ்சிபுரம் - குமர கோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தின் அருகில் ராஜவீதியில் குமாரக் கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இங்குதான் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டது.
   காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.30 வரையிலும் நடைதிறந்து இருக்கும்.
   இங்கு காணும் முருகனுக்கு 5 தலை நாகமும் வள்ளி தெய்வானைக்கு 3 தலை நாகமும் குடை பிடிக்கிறது.முருகனை கல்யாண சுந்தரர் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இதுபோன்று நாகர்குடை பிடிக்கும் விக்ரஹம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த முருகனை நாகர் வழிபடுவதால் நாக சுப்பிரமணியம் என்று பெயர் பெறுகிறார். நாகசுப்பிரமணியரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் பரிகார ஸ்தலமாக அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment