Wednesday, October 8, 2014

திருப்பாம்புரம் (ராகு –கேது பரிகார திருத்தலம்)

கும்பகோணம் காரைக்கால் சாலையில் கொல்லு மாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் என்னும் திவ்யஸ்தலம். காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்க பாம்புர நன்னகர் பாம்புரம் சேஷபுரி போன்ற பல பெயர்கள் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் பாம்பீசர் பாம்புரநாதர் என்பல பெயர்கள் உண்டு. இறைவி பிரமராம்பிகை. வண்டார் குழலி எனவும் அழைக்கப்படுகிறார். ராகு கேது ஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் கீழ்பெரும் பள்ளம் மற்றும் தென்காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களின் பெருமையை ஒரு சேர அமைந்தது இத்தலம்.
  ராகு – கேதுவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ராகுவும் கேதுவும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றனர் என்பது ஸ்தல வரலாறு.காலசர்ப்ப தோஷம் ராகு –கேது தசை நடப்பில உள்ளோர் களத்ரதோஷம் புத்ரதோஷம் உள்ளோர் இங்கு வந்து சாந்தி பரிகாரம் செய்து வருகின்றனர்.
  செவ்வாய் வெள்ளி ஞாயிறு கிழமைகளில் மல்லிகை மணம் தாழம்பூ மணம் அடிக்கும் நேரங்களில் எங்கேனும் ஓரிடத்தில் பாம்பு தென்படுகிறது. தோஷ நிவர்த்திக்காக செவ்வாய் - வெள்ளி- ஞாயிறு கிழமைகள் நன்று. இந்நாள் வரை இவ்வூரில் அகத்தி பூப்பதில்லை ஆல மர விழுதுகள் தரையை தொட்டதில்லை. பாம்பு தீண்டி இறந்தவர் இல்லை.
இக்கோயில் தொலைபேசி எண்- 0435-2469535

No comments:

Post a Comment