Wednesday, October 8, 2014

திருச்செங்கோடு
ஸ்ரீ அர்தநாரீஸ்வரர் திருக்கோயில்
  அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்று பெயர் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் உண்டான சர்ச்சையில் ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்துக் கொள்ள வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன் படி வாயு பகவான் வேகமாக வீச மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களில் விழுந்து ஆதிசேஷன் உடலில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் கொட்டி மலை செந்நிறமானதாக கூறுகின்றனர்.இம்மலைக்கு நாக கிரி வாயு மலை என்னும் பெயர் உண்டு. இம்மலையே லிங்கமாக கருதப்படுகிறது. இம்மலையை பௌர்ணமிநாளில் வலம் வந்தால் கைலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வார்.
   60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது.நாக தோஷம் ராகு தோஷம் காலசர்ப தோஷம் களத்ர தோஷம் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். 60 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இப்படிக்கட்டில் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு உள்ளன. இதனை சத்தியப் படிக்கட்டுகள் எனப்படுகின்றன. இந்த மலையில் ஏற மொத்தம் 1200 படிக்கட்டுகள் உள்ளன. 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலைக்கு எதிரில் நந்தி அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரரை முலவராகக் கொண்ட இம்மலையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் ஆதிகேசவப் பெருமாள் அருளுகிறார்.

இருப்பிடம்

நாமக்கல்லில் இருந்து 30 கி;.மீ தொலைவில் திருச்செங்கோடு அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment