கோடங்கிபட்டி சித்திரகுப்தர் திருக்கோயில்
தேனீயிலிருந்து போடி செல்லும் சாலையில் 7 கி.மீ தூரத்திலுள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை மிகுந்த கோயிலாகும்.
மனிதனுடைய பாப புண்ணியங்களை கணக்கிட்டு அவனுடைய ஆயுளை முடிவு செய்பவர் எமதர்மராஜா ஆனபோதிலும் இதற்கு உறுதுணையாக இருந்து பாப புண்ணிய கணக்குகளை சரியாக கணக்கு வைத்திருப்பவர் சித்ரகுப்தன் என்பவர் ஆவார். கேதுபகவானின் அதிபதியாவர். இவரை வழிபடுவதால் கேது தரும் தீய பலன்களிலிருந்து சற்று குறைத்துக் கொள்ளலாம். காஞ்சியிலும் சித்ரகுப்தருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.
எமதர்மன் சிவபெருமானை அனுகி பூமியில் உள்ளவர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரிவர பார்க்க முடிவதில்லை உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவதாகவும் முறையிட்டுக் கொண்டார். சூரிய பகவானுக்கும் நீலா தேவிக்கும் பிறந்தவர்தான் சித்ரகுப்தன் எமனிடம் உதவியாளராக சேர்ந்தான். ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சித்ரகுப்தனை வணங்கிவர தோஷம் நீங்குகிறது.

No comments:
Post a Comment