Wednesday, October 8, 2014

திருவாசி ஸ்ரீ நடராஜர் ஆலயம்

திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திருவாசி அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து முசிறி செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவாசி நிறுத்தத்தில் நின்று போகும்.
  பொதுவாக நடராஜர் முயலகன் என்ற அசுரன் மீது நடனமாடுவதையே பார்த்திருப்பீர்கள்.
   திருவாசியில் மட்டும் நாகத்தின் தலை மீது நடனமாடுகிறார்.
  காமம் கோபம் பேராசை பற்று அகங்காரம் என்ற ஐந்துமே மருத்துவர்களால் குணப்படுத்த இயலாதது. இதனை பஞ்சவிகார நோய் என்பர். ஒருமுறை கொல்லம் மழவன் என்ற சிற்றரசரின் மகளுக்கு இந்நோய் தொற்றிக் கொண்டது. திருவாசி கோயிலுக்கு வந்த திருஞான சம்மந்தரை இந்த பெண்ணை நோயிலிருந்து காக்க வேண்டினாள். இந்த பஞ்ச விகார அரக்கன்தான் முயலகன். ஞான சம்மந்தரின் பாடலுக்கு மகிழ்ந்த இறைவன் முயலகனை காலால் மிதித்தே கொன்றுவிடுகிறார். முயலகன் இறந்து விட்டதால் அக்னி விரலில் ஆடும் இறைவன் பாதம் பூமியில் படாமல் இருக்க தன் கழுத்திலிருந்த நாகத்தை கீழே இறக்கி அதன்மீது நடனமாடுகிறார்.
  மேலும் இங்கு மட்டுமே விரிந்த ஜடாமுடியை முடித்து வைத்து நடனமாடுவதை காணலாம்.
   சர்ப்பதோஷம் உள்ளவர்கள் ராகு (அ)கேதுவால் பாதிக்கப் பட்டவர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் பாம்பின் மீது நடனமாடும் நடராஜரை தரிசிக்க நற்பலன் கிட்டுகிறது.

No comments:

Post a Comment