Wednesday, October 8, 2014

ராகு கேது உருவான திருவரலாறு


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருத்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலந்தயடிதட்டில் ராகு பகவான் மங்கள ராகுவாகவும் கேது பகவான் ஞான கேதுவாகவும் அமர்ந்து அருள் பாலிக்கிண்றார்கள் இங்கு தினமும் காலை தென்காளஹஸ்தி சிவனுக்கு பூஜை முடிந்த உடன் ராகு கேதுவிற்கு பூஜை நடை பெறுகிறது . வாரத்தில் கிழமை 4.30 க்கு ராகு காலத்தில் 5 வகை அபிஷயங்களுடன் பூஜை நடை பெறுகிறது இதில் கலந்து கொண்டு 108 முறை ராகு கேது காயத்திரி மந்திரங்களை ஜெபித்து வருபவர்களுக்கு ராகு கேதுவால் ஏற்படும் அணைத்து துன்பங்களும் விலகி விடும் இங்கு தினமும் சிவனை வணங்கி விட்டு ராகு கேதுவை வழிபட்டு வருவோருக்கு பிறந்த ராசியில் 2-ம் வீடு 4-ம் வீடு 7-ம் வீடு 8-ம் வீடு அசுப இடத்தில இருந்து அசுப பலன்களை தந்து சோம் பேறியாக்குவது , சர்ப தோஷம் , விஷ கடி , வயது முதிர்ந்தும் திருமணம் நடைபெறாமை , தாய் தகப்பன் சொல் கேளாத குழந்தை , தூக்கமின்மை , குழந்தை இல்லாமை ஆகியவற்றால் கஷ்ட படுபவர்கள் பய பக்தியோடு வழி பட்டுவந்தாள் நினைத்தது நடக்கும் வீரம், விவேகம், பொறுமை, தனித்தன்மை , உயர்ந்த செல்வாக்கு உடனே திருமணம் ஆகியவை உடனே நடக்கும் நடந்து வருகிது .
  பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது என்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு தெரியும். அமிர்தம் கிடைத்தவுடன் அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்பதே ஒப்பந்தம். இந்த நேரத்தில் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாரட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சனை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது. இதில் ஏதோ குளறுபடி உள்ளது என புரிந்துக் கொண்ட கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும் சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி தேவன் என்று நினைத்து ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான். சுந்திர சூரியர்கள் மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறினர். மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவள் தன் கையில் இருந்த அகப்பையில் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார். தலை வேறு முண்டம் வேறு என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் நீங்கவில்லை ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க அசுரர்கள் முயல மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்துவிட்டார். ஏமாற்ற மடைந்த அசுரர்கள் சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர். இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும் தலை இருந்தும் உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு பிரமனிடம் முறையிட்டான். பிரம்மனோ ‘விஷ்ணுவால்தான் ஸ்வர்பானு வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான். விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். இப்போது மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும் பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார். இவ்வாறு ராகு கேது உருவானவுடன் மஹாவிஷ்ணு இப்பூவுலகில் கிருதாயுகம் நடைபெறுகிறது. இப்போது உங்களுக்கு வேலை இல்லை நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்க இன்னும் ஒரு யுகம் பொருத்திருக்க வேண்டும் என்றார்.
   அடுத்த யுகமான திரேதாயுதத்தில் நான் ராமனாக மனிதகுலத்தில் பிறப்பேன். அப்போது உங்கள் சக்தியால் ராகு கோதண்டமாகவும் (வில்) கேது அம்பாகவும் என்னிடம் வருவீர்கள். அசுரகுல கடைசி அரசனான ராவணனை கொல்வதற்கு நீங்கள் பயன் படுவீர்கள். அப்போது உங்கள் பாவம் தொலையும் என்றார். நீங்கள் வித்யாசம் தெரிவதற்காக மற்ற கிரஹங்களைப் போல் இல்லாமல் வான வெளியில் அப்ர தட்சனமாக வலமிருந்து இடமாக சுற்றி வருவீர்கள் என்றார்.
ராகவும் கேதுவும் தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரியசந்திரர்களை பழிவாங்க பிரமனிடம் வரம் கேட்டனர். அந்த வரத்தை பிரமன் தர மறுத்தார். பல காலம் தவமிருந்து பிரமன்னிடம் வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார். இதுவே கிரஹணம் எனப்படுகிறது.
ராகுவும் கேதுவும் வெட்டப்பட்டபோது ஒரு துண்டு நாகேஸ்வரத்திலும் மற்றொரு துண்டு கீழ்பெரும்பள்ளத்திலும் விழுந்ததாகவும் அங்கேயே அவர்கள் குடி கொள்ள இறைவனிடம் வேண்டி அருள் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
 

ராகு வரலாறு

நட்சத்திரம் - திருவாதிரை-சுவாதி-சதயம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
நவரத்தினம் - கோமேதகம்
எண் - 4
நிறம் - சிவப்பு
உயரம் - நெடியர்
நட்பு கிரகம் - சனி சுக்கிரன் புதன்
பகை கிரகம் - சூரியன் சந்திரன் செவ்வாய்
திசை வருடம் - 18 வருடங்கள்
லிங்கம் - அலி
பாஷை - அன்னிய பாஷை
ஜாதி - கலப்பு ஜாதி
குணம் - கோபமுடையவர்
நோய் - பித்தம்
திசை - தென்மேற்கு
சமித்து - அருகு
வாகனம் - ஆடு
சுவை - புளிப்பு
உலோகம் - கருங்கல்
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 11ஃ2 வருடங்கள
தேவதை - பத்ரகாளி
வஸ்திரம் - கருப்பு
ஸ்தலம் - காளாஸ்திரி
கேது வரலாறு
நட்சத்திரம் - அஸ்வினி மகம் மூலம்
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வரளி
நவரத்தினம் - வைடூரியம்
எண் - 7
நிறம் - சிவப்பு
உயரம் - மத்திமம்
நட்பு கிரகம் - சூரியன் சந்திரன் செவ்வாய்
பகை கிரகம் - சனி சுக்கிரன்
திசை வருடம் - 7 வருடங்கள்
லிங்கம் - அலி
பாஷை - அன்னிய பாஷை
ஜாதி - கலப்பு ஜாதி
குணம் - கோபமுடையவர்
நோய் - பித்தம்
திசை - வடமேற்கு
சமித்து - தர்ப்பை
வாகனம் - சிங்கம்
சுவை - புளிப்பு
உலோகம் - துருக்கல்
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 11ஃ2 வருடங்கள்
தேவதை - இந்திரன்
வஸ்திரம் - பலவண்ணம்
ஸ்தலம் - காளாஸ்திரி

No comments:

Post a Comment