பேரையூர் ஸ்ரீநாக நாதர்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரிகைபுரி எனப்படும் பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை வணங்குங்கள். நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாக தீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்;. முறைப்படி இங்கு சென்று வணங்கினால் திருமணத்தடை நீங்கும்.
No comments:
Post a Comment