இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் மூலமாக உள்ள ஆண் குறியையும், பெண் குறியையும் குறிப்பிடும் விதமாகவே லிங்கதின் தோற்றம் பார்க்கப்படுகிறது. அதாவது லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றம் ஆண் வடிவத்தையும், அது வைக்கப்பட்டிருக்கும் பாகமான ஆவுடையார், பெண் குறியையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என் மூன்றாக பகுக்கப்பட்டுள்ள வேளையில், பெண் பாகம் சக்தி பாகம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகில் சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம், பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம், ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என பல வகை லிங்கங்கள் காணப்படுகின்றன
தேவிபுரம் சிவலிங்கம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தேவிபுரம் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பட்டவர்த்தனமாக ஆண் குறி வடிவில் காட்சியளிக்கிறது.
கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இது கர்நாடகத்தின் கோலார் நகரத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.
ஐக்கிய லிங்கம் வாரணாசியில் உள்ள ஐக்கிய லிங்கம்.
அமர்நாத் பனிலிங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது.
1008 லிங்கங்கள் கர்நாடக மாநிலம் ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரையில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட 1008 லிங்கங்கள்.
பானேஷ்வர் இரட்டை சிவலிங்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பானேஷ்வர் சிவன் கோயிலின் இரட்டை சிவலிங்கம்.
நாகலிங்கம் ஆந்திர மாநிலம் லேபாக்ஷியின் பிரபல கோயிலான வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நாகலிங்கம் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கம் உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.
ஹொய்சலேஸ்வரர் கர்நாடக மாநிலம் ஹளேபீடு நகரில் அமைந்துள்ள ஹொய்சலேஸ்வரர் கோயிலின் சிவலிங்கம்.
குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் ஆந்திர மாநிலம் சாமளக்கோட்டா நகரின் குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
தியானலிங்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள இந்த தியானலிங்கம் சத்குரு அவர்களால் 1994-ல் நிறுவப்பட்டது.
சிவபுரி ஸ்படிக லிங்கம் ஹைதராபாத்தில் உள்ள சிவபுரி கோயிலில் இந்த ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது.
கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
லிங்க வடிவ கோயில் பெங்களூர் கெம்ப் கோட்டைக்கு அருகே சிவலிங்க வடிவிலேயே காணப்படும் சிவன் கோயில்
ராஜ்பாரி சிவலிங்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள ராஜ்பாரி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் மிகவும் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது.
சஹஸ்ரலிங்கம் கர்நாடக மாநிலம் சிர்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில், சஹஸ்ரலிங்கத்தின் அடர்ந்தகாடுகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன.
கொடப்பகொண்டா லிங்கம் குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கொடப்பகொண்டா கிராமத்தில் மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுர கோயிலில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கம்.
பஞ்சமுக சிவலிங்கம் ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ITDA கோயிலில் இந்த பஞ்சமுக சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.
லிங்கமும், நந்தியும்! கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி பகுதியில் துங்க நதிக்கரையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிவலிங்கமும், நந்தியும்.
தானிதர் லிங்கம் குஜராத்தின் தானிதர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
ஜம்புலிங்கேஸ்வர் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புலிங்கேஸ்வர், சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
காளை கோயில் சிவலிங்கம் பெங்களூரின் புகழ்பெற்ற காளை கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
சரிப்பள்ளி சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் சரிப்பள்ளி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ராமலிங்கேஷ்வரா கோயிலில் பாறைகளின் இடுக்கில் இந்த சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.
அரசனேஸ்வரர் சிவலிங்கம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திலுள்ள இராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசனேஸ்வரர் சிவலிங்கம்.
பைஜ்நாத் சிவலிங்கம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாலம்பூர் பகுதியிலுள்ள பைஜ்நாத் சிவன் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் இலங்கை வேந்தன் இராவணனால் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
கொடூர் சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கொடூர் என்ற கிராமத்தில் தரையோடு தரையாக இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
புசன்தேஸ்வரர் ஒடிஸா மாநிலத்தின் மிகப்பெரிய லிங்கமாக கருதப்படும் புசன்தேஸ்வர கோயில் சிவலிங்கம்.
அழகுசொக்கர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பறம்புமலை அடிவாரத்தில் அழகுசொக்கர் என்றழைக்கப்படும் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
குடிலோவா ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள குடிலோவா மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
போஜ்பூர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போஜ்பூர் சிவன் கோயிலின் மிகப்பெரிய சிவலிங்கம்.
மீனாட்சியம்மன் கோயில் லிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
கத்ரி சிவலிங்கம் மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதர் கோயில் சிவலிங்கம்.
லிங்கோத்பவர் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயிலில் லிங்கோத்பவராக காட்சிதரும் சிவபெருமான்.
நாராயன் மஹாராஜ் மட சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் நாராயன் மஹாராஜ் மடத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.
படவலிங்கம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன.
மஹாதேவ் லிங்கம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மஹாதேவ் ஆலய சிவலிங்கம்.
கதர்வாரா டமரு காட்டி லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கதர்வாரா நகரிலுள்ள டமரு காட்டி சிவலிங்கம்.
மாமலேஷ்வர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்கம் நகரில் உள்ள மாமலேஷ்வர் கோயில் சிவலிங்கம்.
மாஹேஸ்வர் படித்துறை லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகர படித்துறை ஒன்றில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
ரலாஜ் சிவலிங்கம் குஜராத் மாநிலம் கம்பத் நகரில் உள்ள ரலாஜ் கோயிலின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய சிவலிங்கம்.
மாஹேஸ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகரில் நர்மதை நதியில் அமைந்துள்ள சிவலிங்கம்.
கிணற்றுலிங்கம் அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் வரலாற்று சிதைவுகள் காணப்படும் இடமொன்றில் ஒரு கிணறுக்குள் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
அக்கமாதேவி குகை லிங்கம் ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.
தர்மராஜேஷ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள தர்மராஜேஷ்வர் கோயிலின் சிவலிங்கம்.
ராமேஷ்வர் சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராமேஷ்வர் கோயிலில் தரையோடு தரையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
குல்பாஹர் சிவலிங்கம் உத்தர பிரதேசத்தில் உள்ள குல்பாஹர் நகரில் அமையப்பெற்றுள்ள 10-ஆம் நூற்றாண்டு கிரானைட் சிவலிங்கம
லக்ஷ்மனேஷ்வர் சத்தீஸ்கர் மாநிலம் கரோட் நகரில் உள்ள லக்ஷ்மனேஷ்வர் கோயில் சிவலிங்கம்.
ஷங்கர் ஆலய லிங்கம் மகாராஷ்டிர மாநிலத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோபோலியில் உள்ள ஷங்கர் கோயிலின் சிவலிங்கம்.
பரசுராமேஷ்வர் சிவலிங்கம் ஒடிஸா தலைநகரம் புபனேஸ்வரில் பரசுராமேஷ்வர் கோயிலின் வெளியே அமையப்பெற்றிருக்கும் சிவலிங்கம்.
ஹரிஹரநாத் சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் ஞான்பூர் நகரில் உள்ள ஹரிஹரநாத் மந்திரில் அமைந்திருக்கும் சிவலிங்கம்.
கங்கா படித்துறை லிங்கம் வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் படித்துறை ஒன்றில் காணப்படும் சிவலிங்கம்.
அரண்மனை சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகரி மாவட்டத்தில் உள்ள தீபா அரண்மனையில் இந்த சிவலிங்கம் அமைந்தள்ளது.
கங்கேஷ்வர் தேவ் லிங்கம் ஒடிஸாவின் ரான்பூர் பகுதியில் உள்ள கங்கேஷ்வர் தேவ் கோயிலின் சிவலிங்கம்.
மவுண்ட் அபு சிவலிங்கம் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு ஸ்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.
மதுரா சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள சனி பகவான் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
பாடாலேஷ்வரர் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலுள்ள பாடாலேஷ்வரர் கோயிலின் சிவலிங்கம்.
தேவிபுரம் சிவலிங்கம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தேவிபுரம் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பட்டவர்த்தனமாக ஆண் குறி வடிவில் காட்சியளிக்கிறது.
கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இது கர்நாடகத்தின் கோலார் நகரத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.
அமர்நாத் பனிலிங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது.
1008 லிங்கங்கள் கர்நாடக மாநிலம் ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரையில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட 1008 லிங்கங்கள்.
பானேஷ்வர் இரட்டை சிவலிங்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பானேஷ்வர் சிவன் கோயிலின் இரட்டை சிவலிங்கம்.
தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கம் உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.
குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் ஆந்திர மாநிலம் சாமளக்கோட்டா நகரின் குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
தியானலிங்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள இந்த தியானலிங்கம் சத்குரு அவர்களால் 1994-ல் நிறுவப்பட்டது.
சிவபுரி ஸ்படிக லிங்கம் ஹைதராபாத்தில் உள்ள சிவபுரி கோயிலில் இந்த ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது.
கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
லிங்க வடிவ கோயில் பெங்களூர் கெம்ப் கோட்டைக்கு அருகே சிவலிங்க வடிவிலேயே காணப்படும் சிவன் கோயில்
சஹஸ்ரலிங்கம் கர்நாடக மாநிலம் சிர்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில், சஹஸ்ரலிங்கத்தின் அடர்ந்தகாடுகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன.
கொடப்பகொண்டா லிங்கம் குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கொடப்பகொண்டா கிராமத்தில் மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுர கோயிலில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கம்.
லிங்கமும், நந்தியும்! கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி பகுதியில் துங்க நதிக்கரையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிவலிங்கமும், நந்தியும்.
தானிதர் லிங்கம் குஜராத்தின் தானிதர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
காளை கோயில் சிவலிங்கம் பெங்களூரின் புகழ்பெற்ற காளை கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
சரிப்பள்ளி சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் சரிப்பள்ளி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ராமலிங்கேஷ்வரா கோயிலில் பாறைகளின் இடுக்கில் இந்த சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.
அரசனேஸ்வரர் சிவலிங்கம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திலுள்ள இராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசனேஸ்வரர் சிவலிங்கம்.
கொடூர் சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கொடூர் என்ற கிராமத்தில் தரையோடு தரையாக இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
புசன்தேஸ்வரர் ஒடிஸா மாநிலத்தின் மிகப்பெரிய லிங்கமாக கருதப்படும் புசன்தேஸ்வர கோயில் சிவலிங்கம்.
அழகுசொக்கர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பறம்புமலை அடிவாரத்தில் அழகுசொக்கர் என்றழைக்கப்படும் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
போஜ்பூர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போஜ்பூர் சிவன் கோயிலின் மிகப்பெரிய சிவலிங்கம்.
கத்ரி சிவலிங்கம் மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதர் கோயில் சிவலிங்கம்.
லிங்கோத்பவர் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயிலில் லிங்கோத்பவராக காட்சிதரும் சிவபெருமான்.
படவலிங்கம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன.
மஹாதேவ் லிங்கம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மஹாதேவ் ஆலய சிவலிங்கம்.
கதர்வாரா டமரு காட்டி லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கதர்வாரா நகரிலுள்ள டமரு காட்டி சிவலிங்கம்.
மாமலேஷ்வர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்கம் நகரில் உள்ள மாமலேஷ்வர் கோயில் சிவலிங்கம்.
மாஹேஸ்வர் படித்துறை லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகர படித்துறை ஒன்றில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
ரலாஜ் சிவலிங்கம் குஜராத் மாநிலம் கம்பத் நகரில் உள்ள ரலாஜ் கோயிலின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய சிவலிங்கம்.
மாஹேஸ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகரில் நர்மதை நதியில் அமைந்துள்ள சிவலிங்கம்.
அக்கமாதேவி குகை லிங்கம் ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.
தர்மராஜேஷ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள தர்மராஜேஷ்வர் கோயிலின் சிவலிங்கம்.
ராமேஷ்வர் சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராமேஷ்வர் கோயிலில் தரையோடு தரையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.
குல்பாஹர் சிவலிங்கம் உத்தர பிரதேசத்தில் உள்ள குல்பாஹர் நகரில் அமையப்பெற்றுள்ள 10-ஆம் நூற்றாண்டு கிரானைட் சிவலிங்கம
ஷங்கர் ஆலய லிங்கம் மகாராஷ்டிர மாநிலத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோபோலியில் உள்ள ஷங்கர் கோயிலின் சிவலிங்கம்.
ஹரிஹரநாத் சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் ஞான்பூர் நகரில் உள்ள ஹரிஹரநாத் மந்திரில் அமைந்திருக்கும் சிவலிங்கம்.
கங்கா படித்துறை லிங்கம் வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் படித்துறை ஒன்றில் காணப்படும் சிவலிங்கம்.
அரண்மனை சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகரி மாவட்டத்தில் உள்ள தீபா அரண்மனையில் இந்த சிவலிங்கம் அமைந்தள்ளது.
கங்கேஷ்வர் தேவ் லிங்கம் ஒடிஸாவின் ரான்பூர் பகுதியில் உள்ள கங்கேஷ்வர் தேவ் கோயிலின் சிவலிங்கம்.
மவுண்ட் அபு சிவலிங்கம் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு ஸ்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.
மதுரா சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள சனி பகவான் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.
பாடாலேஷ்வரர் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலுள்ள பாடாலேஷ்வரர் கோயிலின் சிவலிங்கம்.
No comments:
Post a Comment