Thursday, January 22, 2015

கருவறையில் உருவமாக சிவபெருமான்

download (2)
ஆந்திரபிரதேசத்தில் 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் நுளம்ப பல்லவ மன்னர்களின் தலை நகராக விளங்கிய தலம் ஹேமாவதி. அக்காலத்தில் ஹெஞ்சேரு என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் ஆங்கிலேயர்களின் காலத்தில் ஹேமாவதி ஆனது.

download (4)
நுளம்ப பல்லவ மன்னர்களுள் ஒருவரான மகேந்திரன் என்பவனின் ஆட்சியின்போது இங்குள்ள ஆலயங்கள் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டனவாம். நுளம்ப பல்லவர்களாலும் பின்னர் வந்த சோழ மன்னர்களாலும் கட்டப்பட்ட நான்கு சிவாலங்கள் இங்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அதில் சித்தேஸ்வரர் ஆலயத்தில் மட்டும் சிவபெருமானை உருவத்திருமேனியிலும் மற்ற ஆலயங்களில் லிங்கத் திருமேனியிலும் தரிசிக்கலாம்.

images (1)
பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட சித்தேஸ்வரர் ஆலயத்தின் முன்பு அக்னி தீர்த்தகுண்டம் உள்ளது. கருவறையில் நான்கு கரங்களுடன் ஒரு பீடத்தின் மீது சித்தேஸ்வரர் இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டவாறு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ஹெஞ்சேரப்பா என்றும் அழைக்கப்படுகிறார். அவரது பின்புறம் பிரபை போன்று சுருள் சுருளாக சடாமுடி உள்ளது. பின் இடக்கையில் டமருகமும் வலக்கரத்தில் திரிசூலமூம் முன் இடக்கையில் கபால பாத்திரமும் ஏந்தியிருக்க பின் வலக்கை அபய ஹஸ்தமாக உள்ளது. தினமும் இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் ருத்ர ஹோமம் ஜபம் நடக்கின்றன,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரை வழிபடுகின்றனர்.

download (3)
பிரகாரத்தில் துர்க்கையின் அம்சமான நவகோடம்மா  வினாயகர்  கால பைரவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சித்தேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்ரி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷத்தன்றும் திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

download
இங்கு ஆலய வளாகத்தில் தொட்டேஸ்வரர் சோமலிங்கேஸ்வரர் விருபாட்சேஸ்வரர் மல்லேஸ்வரர் ஆலயங்களும் உள்ளன. இவற்றோடு சித்தலிங்கேஸ்வரரையும் சேர்த்து இத்தலத்தை பஞ்சலிங்க க்ஷேத்திரமாக வழிபடுகின்றனர்.download (5)
மிகப் பழமையானதாகக் கருதப்படும் தொட்டேஸ்வரர் ஆலயத்தின் மூலவர் ஆறடி உயர லிங்கமாக அருளுகிறார். இவருக்கு நேர் எதிரில் 4 அடி உயரமும் 8 அடி நீளமும் கொண்ட பெரிய நந்தி உள்ளது. இங்குள்ள கருங்கல்லால் வடிக்கப்பட்ட தூண்களும் சிலைகளும் கலை நயமிக்கவை. ராஜேந்திர சோழ மன்னன் இத்தூண்களின் அழகில் மயங்கி அவற்றில் 44 தூண்களை வேறு ஓரிடத்தில் ஆலயம் கட்டுவதற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உருவத் திருமேனியாக எழுந்தருளியிருக்கின்ற சித்தேஸ்வரரை மனதார வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் அகன்று அமைதியான வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்,

download (1)

 ஆந்திராவில் அனந்தப்பூரிலிருந்து சுமார் 160 கி மீ தொலைவில் ஹேமவதி என்ற கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது.

No comments:

Post a Comment