ஸ்ரீ நூக்காலம்மா
ஆந்திர மானிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லியில் அமைந்துள்ளது ஸ்ரீ நூக்காலம்மா ஆலயம். கருவறையில் சுதை வடிவத்தில் சுமார் 10 அடி உயரத்தில் வர்ணம் பூசப்பட்டு பக்தர்களுகு அருள்பாலிக்கிறாள் இந்த அம்பிகை. ஆந்திர மானிலத்தை சுமார் 250 ஆண்டுகள் ஆண்ட காகதீய மன்னர்களின் குலதெய்வம் இவள். ஒன்பது சக்தி வடிவங்களில் ஒன்றான அனகா தேவியே ஸ்ரீ நூக்காலம்பிகாவாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். அனகா தேவியின் பெயராலேயே இந்த ஊருக்கு அனகாபல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். அன்னியர் படையெடுப்புக்குப் பின் காகதீய மன்னர்கல் ஆட்சி இழந்ததை அடுத்து இந்த ஆலயம் பொலிவிழந்து பூஜை வழிபாடுகள் நின்று போயின.
விஜய நகர மன்னர்கள் காலத்தில் மீண்டும் இந்த ஆலயம் பொலிவு பெற்றது. அவர்கள் செல்வங்களை அள்ளித் தருபவல் என்ற பொருளில் நூக்காலம்மா என்ற பெயரில் வழிபட்டனர். தங்களின் வெற்றிக்கு இவளது கருணையே காரணம் என்றும் கருதினர். ஆலய முகப்பை ஐந்து கலசங்களைக் கொண்ட மூன்ரு நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. மிக விசாலமான பிராகாரங்களைக் கொண்டிருப்பினும் அந்தராளம் எனப்படும் உள் மண்டபம் மிகச் சிறியது. முதலில் ரௌத்ர ரூபிணியாக இருந்த தேவியை ஒரு மரத்தின் கீழ் வழிபட்டு வந்துள்ளனர். முன்மண்டபத்தில் சுதையில் தத்ரூபமாக வடிக்கப்பட்ட கிழக்கு நோக்கிய ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியும் சுற்றிலும் பிற தேவியர் திருவுருவங்களும் பக்தர்களின் கண்களைக் கவரும்படி உள்ளன. இங்குள்ள ஸ்ரீ சந்தான லக்ஷ்மியை வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
கருவறையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீ நூக்காலம்மா நுழைவாயிலில் இரண்டு புறங்களிலும் யாளிகல் மீது ஆரோகணித்த போர்வீரர்கள் கீழே யானைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. பின் இடக்கரத்தில் சர்ப்பம் சுற்றிய டமருகம் பின் வலக்கரத்தில் திரிசூலம் முன் வலக்கரத்தில் வாள் முன் இடக்கரத்தில் குங்கும பாத்திரம் ஏந்தி இரு கால்களையும் கீழே தொங்கவிட்டு சிம்மாசனத்தின் மீது தேவி பெரிய உருவில் காட்சி தருகிறாள். கனிவான முகம் அகன்று விரிந்த கண்கள் பெரிய வெள்ளிக் கிரீடம் மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களோடு காட்சி தருகின்ற தேவியின் விக்கிரகம் நவதாள் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது தேவியின் முகத்திலிருந்து கால்வரை ஒவ்வொன்றும் 14 அங்குல அளவு கொண்ட ஒன்பது பாகங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தற்போது காட்சி தரும் ஸ்ரீ நூக்காலம்மா தேவி விக்கிரகம் 1969 ஆண்டு சோளவரம் எல்லய்யா என்ற சிற்பியால் செய்யப்பட்டது. தேவியின் சிலைக்கு ஆண்டு தோறும் புதிய வர்ணம் பூசப்படுகிறது.
ஸ்ரீ நூக்காலம்மா தேவி உக்கிரகமாக இருப்பதால் அதை தணிக்கின்ற வகையில் கருவறையின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஓம் என்ற எழுத்துக்களின் மீது பக்தர்கள் வெண்ணெய் பூசுகின்றனர். ஒவ்வொரு காலை செய்யப்படும் பூஜைக்கு ஓங்கார பூஜை என்றே பெயர்.
ஞாயிறு செவ்வாய் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் தெலுங்கு புத்தாண்டான யுகாதிக்கு முதல் நாள் வரும் அமாவாசை கொத்த அமாவாசை இந்த சமயத்தில் ஒடிசா சட்டீஸ்கர் மேற்கு வங்கம் போன்ற மானிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தேவியை வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தேவி ஆவிர்பவித்த நாளாகக் கருதப்படும் பால்குண அமாவாசையை ஒட்டி பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. கவர வம்சத்தினர் இங்க ஆலயத்தில் பரம்பரையாக பூஜை செய்து வருகின்றனர். லலிதா சஹஸ்ர நாமம் அஷ்டோத்திரம் போன்றவை பாராயணம் செய்யப்படுகின்றன. தீபாவளி மற்றும் நவராத்திரி நாட்களில் இந்த ஆலயத்தின் ஸ்ரீ மகாலட்சுமி பூஜை பிரத்யேகமாக நடைபெறுகிறது.
விசாகப்பட்டினத்திலிருந்து அனகாபல்லி சுமார் 40 கி மீ தூரத்தில் உள்ளது.
No comments:
Post a Comment