Thursday, January 22, 2015

சிவன் தந்த லிங்கம்

download
ராமபிரான் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம், பட்டீஸ்வரம் வேதாரண்யம் என்று தமிழகத்தில் சொல்லப்படுவது போலவே பிற இடங்களிலும் தல புராணங்கள் உண்டு. என்றாலும் ஸ்ரீராமன் பிரதிஷ்டை செய்யும் பொருட்டு சிவபிரான் தாமே நேரில் தோன்றி லிங்கத் திருவடியைத் தந்தருளிய தலம் கேசரகுட்டா. ஆந்திர மானிலம் ஹைதிராபாத்ஹ்டிலி இருந்து 15 கி மீ தொலைவில் உள்ளது இந்த மலைக்கோயில்.

download (3)
கடினமான மலைப்பிரதேசத்தில் பாறைகளின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. சாதாரண நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதில்லி. ஆனால் கார்த்திகை மாதம் முழுவதும் இங்கு அலைமோதும் பக்தர்கல் கூட்டம் கணக்கிலடங்காது. சாரிசாரியாக மாட்டு வண்டிகளில் யாத்ரீகர்கல் வந்தவண்ணம் இருப்பார்கள்.

download (1)
திரேதாயுகத்தில் ஸ்ரீ ராமபிரான் ராவண சம்ஹாரம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் இந்த இடத்தைப் பார்த்தவுடன் இங்கு சிறிது சிரம பரிகாரம் செய்துகொண்டு போக விரும்பினாராம். அரக்க குணம் கொண்ட ராவணன் அந்தண குலத்தில் பிறந்து சந்தியாவந்தனம் உள்ளிட்ட் நித்ய கர்மாக்களை முறையாகச் செய்தவன். ஆதலால் அவனை வதைத்த தோஷம் நீங்க ராமர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதே போன்ரு இங்கு வழிபட அனுமனி அழைத்து காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரும்படி பணித்தார். காசி சென்ற அனுமன் 101 சிவலிங்கங்களைச் சுமந்துகொண்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது. குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமர் நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டார். அந்த நேரத்தில் சிவபிரான் தாமே தோன்றி லிங்க வடிவை தந்தருளினார் என்கிறது புராணம். தாமதமாக வந்த அனுமன் தான் வருவதற்கு முன்பே ஸ்ரீராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்துவிட்டதைக் கண்டு கோபமும் வருத்தமும் கொண்டு தான் கொண்டுவந்த லிங்கங்களை அப்படியே அந்த மலை மீதிருந்து நாலாபுறத்திலும் தூக்கி எறிந்துவிட்டான் என்கிறார்கள். அப்படி எறியப்பட்ட லிங்கங்கள் இன்றும் பல கோணங்களில் இந்த கேசரகிரி ராமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் சிதறிக் கிடப்பதைக் காண்கிறோம். ஏமாற்றமடைந்த அனுமனை சாந்தப் படுத்தும் விதமாக அந்த லிங்கங்களில் எதை பூஜித்தாலும் தான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கேஸ்வரரைப் பூஜித்த பலன் கிடைக்கும் என்று அருளினார் ஸ்ரீ ராமர்.

download (2)
இன்றும் கூட இங்கு சிதறி இருக்கும் எல்லா லிங்கத் திருமேனிகளையும் பக்தர்கள் பூஜிப்பதை காணலாம். யாத்ரீகர்கள் இங்கு முதலில் அனுமன் சன்னதியை வழிபட்ட பிறகே சிவனைத் தரிசிக்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமான் ஸ்ரீ பவானி ராமலிங்கேஸ்வர ஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். அதற்கேற்ப மூலஸ்தானத்தில் அம்பிகைக்கான பிம்பம் ஒன்றும் காணப்படுகிறது.

images (1)
சிவராத்திரி தினங்களில் இங்கே பெருந்திரளான பக்தர்களைக் காண்கிறோம் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும் பொருள். மங்களத்தை அருளும் பெருமானுக்குரிய மங்களமான ராத்திரியில் அவரைத் தரிசிப்பதும் வணங்குவதும் பூஜிப்பதும் நம் வாழ்வில் மங்கலத்தை நிரப்புவதில் என்ன ஆச்சர்யம்.

images

No comments:

Post a Comment