Thursday, January 22, 2015

கால் நடைகள் நலம்பெற ஒரு கடவுள்

பொதுவாக நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நோய்  நொடியின்றி ஆரோக்கியமாக் வாழவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வோம்  ஆனால் ஒரு தலத்தில் பக்தர்கள் தங்கள் கால் நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் விரைவில் குணமாக வேண்டும்என்பதற்காகவும்  வேண்டிக்கொள்கிறார்கள். அந்தத் தலம் குட்டையூர். இங்கு மாதேஸ்வரர் என்னும் திரு நாமத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் ஈசன்தான் பக்தர்களையும் கால் நடைகளைஉம் காத்தருள்கிறார்.
இங்குள்ள மலைப்பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடுகளில் ஒரு பசு மட்டும் தனியாக தினமும் எங்கோ சென்று வருவதை ஒரு நாள் கவனித்தார் அதன் உரிமையாளர்.

download (1)
ஒரு நாள் பசுவை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது பாறைகளால் மூடப்பட்டு குகை போன்று காணப்பட்ட இடத்தில் சுயம்பு லிங்கத்தின் மேல் அப்பசு பால் சொரிவதைக் கண்டு மெய்சிலிர்த்தார். பின்னர் ஊர் மக்களுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட அவர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு ஆனந்தித்து அன்றிலிருந்து அதை வழிபடத் துவங்கினார்கள். தெய்வாம்சம் பொருந்திய அந்த இடத்தில் எழுந்தருளியிருந்த ஈசனை ஒரு காலத்தில் சித்தர்கள் பூஜித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது.

download (2)
300 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களின் ஒத்துழைப்போடு குகைக்கு அருகே ஆலயம் எழுப்பப்பட்டது. சுமார் இரு நூறு படிகளேறி மலைமேல் இருக்கும் கோவிலை அடையலாம். மாடு வழிபட்டதால் மூலவர் மாடேஸ்வரன் என்று அழைக்கப்பட்டு பின்னர் மாதேஸ்வராகி என்ரும் அவர் குடிகொண்ட மலை மாதேஸ்வரன் மலை என்றே அழைக்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

download (3)
தாங்கள் வளர்க்கும் கால் நடைகள் நோயால் பாதிக்கப்பட்டால் மாதேஸ்வரரிடம் மனமுருக வேண்டி அங்கு தரப்படும் திரு நீறை எடுத்துச் சென்று அதற்கு பூசி கோயிலில் தரப்படும் தீர்த்தத்தை அதன் மீது தெளித்தால் நோய் குணமாகிறதாம். சமீபத்தில் கோமாரி நோயால் இப்பகுதி கால் நடைகள் பாதிப்புக்குள்ளானபோது பல விவசாயிகள் இத்தல இறைவனை பிரார்த்தித்து தங்கள் கால் நடைகளை காத்தனராம்.  கால் நடைகளுக்கு நோய் குணமானால் கோயிலுக்கு கருங்கல்லில் நந்தி உருவாரம் செய்து தருவதாக மாதேஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள்  நேர்த்திக்கடனை செலுத்துவது வாடிக்கை.

download
விதை விதைத்தல் புது வீடு கட்டுதல் நிலம் வாங்குதல் திருமணம் உள்பட எந்த காரியமாக இருந்தாலும் இங்கு பூப்போட்டு சம்மதம் வாங்குவது ஒரு சடங்கு. பூ வரம் கேட்க இத்தலத்திற்கு வருபவர்கள் காலை நேரத்தில் வரவேண்டுமாம்.
அமாவாசை பிரதோஷம் கிருத்திகை போன்ற முக்கிய நாட்களிலும் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன,
பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். அவர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தின்போது மாதேஸ்வரன் மலை உச்சியில் ஒரு வாரம் மகா தீபம் ஏற்றப்படுவது சிறப்பு. ஆண்டுதோறும் கனுமாட்டுப்பொங்கல் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலை ஐந்து மணிக்கே நடை திறக்கப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment