Thursday, January 22, 2015

கோகர்ணத்தீஸ்வரர்

download
கர்னாடக மானிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மங்களூரு. கடற்கரையும் மலைப்புறமும் ஒன்று சேர்ந்து வசீகரிக்கும் இயற்கை அழகு கொண்டது. கேரளத்தின் எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது நாராயணகுரு கட்டிய ஒரு கோயில்.
கேரளத்தில் ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே வர தடை இருந்த சென்ற  நூற்றாண்டில் சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஸ்ரீ நாராயணகுரு ஈழவ சமுதாயத்துக்காகவே பல கோயில்களைக் கட்டினார். இறைவனின் சன்னதிக்குள் ஈழவ மக்கள் அணுக முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்காக 1912ம் ஆண்டில் மங்களூரு நகருக்கு வருகை தந்தபோது இங்கு எழுப்ப தீர்மானித்தார். இந்த இடம் திப்பு சுல்தான் காலத்தில் குதிரை லாயமாகவும் குதிரைகள் மேய்ச்சல் இடமாகவும் திகழ்ந்தது. எனவே குதிரே வாலி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் குத்ரோலி என்று பெயர் உருமாற்றம் பெற்றது. இந்த இடத்தை ஸ்ரீகோகர்ண நாத க்ஷேத்ரம் என்று அழைத்தார்.

download (1)
இந்தக் கோயிலும்கூட கேரளபாணியில்தான் முதலில் கட்டப்பட்டு பின்னாளீல் சோழர்கால கட்டடக் கலை அம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது. கோயிலுக்குள்  நுழையும்போதே பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் தமிழ் நாட்டுப்பாணியிலான அறுபதி அடி ராஜ கோபுரம். கோபுரத்துக்கு முன் மிகப்பெரிய நந்தியின் சிலையை தரிசிக்கிறோம்.

images (2)
கோயிலுக்குள் நுழைந்த பின் வலது புறத்தில் நாராயண குருவின் பளிங்கு சிலையை தரிசிக்கலாம். சிலையில் உள்ள கீரிடத்தில் ரத்தினக் கற்கள் மின்னுகின்றன, இவை பக்தர்களால் அவருக்கு சமர்பிக்கப்பட்டவையாம்.

images
கோயிலில் பிரதான் தெய்வமாகக் காட்சி அளிக்கிறார் கோகர்ணத்தீஸ்வரர். அன்னபூர்ணேஸ்வரி சன்னதி அருகில் உள்ளது. கணேசர்  காலபைரவர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. கோயிலைச் சுற்றி வரும்போது ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதியையும்  முகப்பில் பகவத்கீதா உபதேசத்தையும் தரிசிக்கலாம். சுற்றுலுமுள்ள கோஷ்டங்களில் துர்கை  தத்தாத்ரேயர் விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்களை அழகுறக் காட்சி அளீக்கின்றன,

images (1)
பிரதான சன்னதியின் பின்புறம் நாகர் சன்னதி உள்ளது. உள்ளே ஒரு தடாகம். அதன் ஒரு புறத்தில் பனிமலை மீது சிங்கத்தின் அருகில் கையில் சூலத்தோடு நிற்கும் பார்வதி மற்றும் வினாயகர் முருகன் ஆகியோர். தடாகத்தின் நான்கு மூலைகளிலும் சிவபெருமானின் பெரிய உருவம் ஆலகால விஷம் உண்ட  நீலகண்டனாக விதவிதமான் வடிவங்களீல் காட்சியளிக்கிறார். 

downl
கோயிலில் நித்தயப்படி பூஜைகள் குறைவற நடக்கின்றன, நவராத்ரி சமயம் நவதுர்கையரின் ஷோப யாத்திரை விழா மிகச்சிறப்பாக நடக்கிறது. மகா சிவராத்ரி இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கிருந்து சற்று தொலைவில் தான் மங்களூரு நகருக்கே இந்தப் பெயர் வருவதற்கு காரணமான மங்களாதேவி கோயிலும் உள்ளது.

No comments:

Post a Comment