விநாயகர் ஸ்வார்சியமான சில தகவல்.
விநாயகர் ஸ்வார்சியமான சில தகவல்.
1, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.
2, திருமாலின் உறைவிடம் பாற்கடல் கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.
3, ஆதிசங்கரர் கணேச பஞ்ச ரத்னத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னிதியில்.
4, கோவையில் உள்ள ஒரு விநாயகர் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.
5, சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோம கணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.
6, மீனாக்ஷியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
7, ஆனைமுகன் உறைவிடம் கயிலைலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவன் ஆகும்.
8, மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுங்காரகன் என்றலைக்கப்படுகிறார்.
9, கணபதிக்கு திபத்யர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.
10, திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.
11, சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.
12, உத்திராட நக்ஷத்திரத்தின் அதிதேவதை கணபதி.
13, ஜாவாதீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறாதாம்.
14, பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.
15, அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனப் குறிப்பிட்டுள்ளார்.
16, திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.
17, முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியாம்.
18, ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறது.
19, திருப்பரங்குன்றத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.
20, ப்ராஹ்கெனேஸ் என்பது கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.
21, குழந்தை விநாயகர். – தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில். இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன் தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகப்பெருமான்.
22, வியாக்ர சக்தி விநாயகர். – மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில் விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை “வியாக்ர சக்தி கணபதி” என்றழைக்கப்படுகிறார்.
23, சர்ப்ப விநாயகர் –
சர்ப்ப விநாயகர் பாபநாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. ராகு-கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.
24, சிலம்பணி விநாயகர் –
தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
நன்றி – தினமலர் இதழ்.
25, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் இரண்டு கைகளுடன் வடக்கு முகமாக அமர்ந்துள்ளார்.
26, பிள்ளையார்பட்டியில் முக்குறுனி கொலுக்கட்டை விநாயக சதுர்த்தி அன்று வழங்கப்படுகிறது.
27, மகா கணபதி ஹோமம் செய்வதற்கு மோதகம், அவல், நெல்பொரி, சத்துமாவு, கரும்பு, கொப்பரைத்தேங்காய், வெள்ளை எள், வாழைப்பழம். ஆகிய எட்டு பொருட்களை – அஷ்ட திரவியங்களை சேர்க்க வேண்டும்.
28, விநாயகருடைய பதினாறு வடிவங்களுள் பதினாங்காவது புவனேச வடிவை கடற்கரையில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று விதி. அப்படி கடற்கரையில் அமைந்த விநாயகர் புதுவை மணக்குள் விநாயகர். எந்த ஊரிலும் விநாயருக்குப் பள்ளியறை கிடையாது. இங்கு மட்டும் பள்ளியறை உண்டு.
No comments:
Post a Comment