Tuesday, November 11, 2014

திருக்கல்யாணங்கள்!


தெய்வத் திருமணங்கள் இந்தப் பூவுலகில் நிச்சயிக்கப்பட்டு, வானவர் புகழ, மானிடர் மகிழ நடந்தேறி ஆனந்தம் அளிப்பன...

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிமீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள்.
பெற்றவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகள்திருக்கல்யாணம் நடத்தி மகிழ்கிறார்கள்..
மீனாக்ஷி திருக்கல்யாணம்

நாமகளும் பூமகளும் தோழியராய் இருக்க 

நான்முகனும் நான்மறையை நலமுடனே ஒலிக்க


நாரணனும் தங்கையவள் கரம்பிடித்துக் கொடுக்க
நல்லுலகம் போற்றிடவே சிவசக்தி சேர!

அழகுக்கே இலக்கணமாய் மணமக்கள் ஜொலிக்க
அன்பிற்கே இலக்கணமாய் உலகிற்கருள் கொடுக்க
அருகருகே வீற்றிருந்து காதலிலே களிக்க
அம்மைஅப்பரின் பொற்பதங்கள் பணிந்தேற்றி மகிழ்வோம்..


உலகத்தின் எந்த மூலையிலும் சிறிதும் இருள் சேரமுடியாதபடி, கோடி சூர்யப் பிரகாசத்துடன், தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் ஜொலிக்க, ஈசன் கல்யாண பரமேஸ்வரராகக் காட்சியளிக்க முகத்திலிருந்து வீசிய தேஜஸில், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர், பிணிகளால் வாடுவோர் அனைவரும் உடல் நலம் பெறுகின்றனர். 
ஏழ்மையிலும் வறுமையிலும் வாடிக் கொண்டிருந்தவர்கள், வளம் கண்டு மகிழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஒளி, கோணலுற்ற மனங்களை எல்லாம் நேர்ப்படுத்தியது
உலகம் உய்வுற ஈசன் பார்வதியை மணந்தார்..

உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. 

அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். 
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.
மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும்.

 மக்கள் வெள்ளம் --மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 


புதிய தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்


சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. 

பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. 

பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. 

பாசத்தால் சூழப்பட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. 

ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார். 
 மங்கள மங்கையாக மணக்கோலம் கொண்ட சிவசொர்ணாம்பிகை 
சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை எனவே சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறுகின்ற திருக்கல்யாணத்தை தரிசனம் செய்பவர்களுக்கு அன்னை இம்மையில் எல்லா நலங்களையும் அளித்து மறுமையில் முக்தி பேறும் வழங்குகின்றாள். 
திருக்கல்யாண கோலத்தில் சொர்ணாம்பாள் காரணீஸ்வரர் 
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் சிவபெருமானுக்கே உரிய திருக்கயிலாயவாகனத்தில் சேவை சாதிக்கின்றார்,
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
 



சென்னை மயிலாப்பூர் ...கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்  கோலாகல திருக்கல்யாணம் ...

திருக்கல்யாணம் முடிந்து வீதியுலா வரும் போது புல்லாங்குழல் மட்டுமே இசைக்கப்படும் என்பதால் புல்லாங்குழல்  இசையில் வீதியுலா நடைபெறும்...

திருமங்கலக்குடி அன்னை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள் புரிகிறார். அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும். அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.
இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

ராமர்சீதை திருக்கல்யாணங்கள்!











இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தீண்டேன் என்று ஏகபத்னி விரதனான
ராமர் சீதை திருமணத்தில் 
மிதிலையில் மகிழ்ச்சி!

பங்குனி உத்தரம் ஆன பகற்போது
அங்க இருக்கினில் ஆயிர நாமச்
சிங்கம் மணத்தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத் தான் -- 
என்பது கம்பன் படைத்த கடி மணப் படலப் பாடல். ‘
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெலாம், கற்பக மலர்களையும், பொன் மலர்களையும், முத்துக்களையும் மழையாகச் சொரிந்தனர். புலவர்கள் வாழ்த்த, மன்னர்கள் பாராட்ட, சுமங்கலிப் பெண்கள் பல்லாண்டு பாட, மங்கலச் சங்குகள் முழங்கின; முரசுகள் முழங்கின. திருமணம் இனிதே நடந்தேறியது.
.ராமபிரான், சீதையை கரம் பிடித்த சில நாட்களிலேயே வனவாசம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 
வன வாச நாட்கள் மொத்தம் 14 ஆண்டுகள். இதில், ராவணனால் கடத்தப்பட்டு, 10 மாதங்கள் சிறையில் இருந்தார் சீதை. 
கானகத்தில் அவர் இருந்தது 12 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே. 
"நாங்கள் உங்கள் திருமணத்தை காணவில்லை, எனவே மீண்டும் திருக்கல்யாணத்தை நடத்தி காட்ட வேண்டும்!'
 

திருமலை திருப்பதி தேவஸ்தானம்,ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம்
Sri Adhi jagannatha Perumal along with Sridevi and Bhoodevi
திருவாலியில் சிறப்பாக நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. 
புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் சேவை சாதிக்கும் அழகு.
திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதிகள்-உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

No comments:

Post a Comment