தோஷங்கள் விலகும் பாடல்கள்
திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்..
அருணகிரிநாத சுவாமிகள் எழுதிய திருப்புகழ் பாடல்கள் மந்திர மயமானவை என்று காஞ்சி மகா சுவாமிகள் கூறி இருக்கிறார்.
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்:
"திருமணம் ஆகாதவர்கள் இப்பாடலை நாற்பத்து எட்டு நாட்கள் தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ ஆறுமுறை பாராயணம் செய்தால், எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சரி, தடைகளாக இருந்தாலும் சரி அவைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பது உறுதி. திருமணம் ஆனவர்கள் இப்பாடலை பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்பது உறுதி."
திருப்புகழ்:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
ராம ஸ்தோத்திரம் .... அமைதியான வாழ்வு பெற
இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ர÷க்ஷதாம் ராமலக்ஷ?மணௌ
No comments:
Post a Comment