Saturday, November 22, 2014

தேனை உறிஞ்சும் அதிசய விநாயகர்



பிரளயம் வெள்ளப்பெருக்கால் ஏற்ப்படும் அழிவு. ஒருமுறை ஏற்ப்பட்ட பிரளயத்தில் இருந்து மக்களை காத்து பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இந்த பகுதிக்கு திருபுறம்பியம் என்ற பெயர் வந்ததாக கூறபடுகிறது இதற்க்கு புராணக் கதை ஓன்று உள்ளது.

சாட்சிநாதர் கோவில்

கும்பகோணத்திற்கு வடமேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருபுறம்பியம் பகுதியில் கோவில்கொண்டுள்ள சிவன் 'சாட்சிநாதர்' என்ற நாமத்தால் அழைக்கபடுகிறார். உமையவளின் திருநாமம் கரும்பன்ன  சொல்லம்மை என்பதாகும் புன்னை மரம் தல விருட்சமாக கொண்ட இந்த தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.

ரத்தினவல்லி என்ற வணிககுல பெண், தனது மாமன் மகனுடன் இந்த ஊருக்கு வந்தாள். அப்போது பாம்பு ஓன்று தீண்டியதில் அந்த பெண்ணின் மாமன்  மகன் இறந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த திருஞானசம்பந்தரிடம் தன்  வேதனையைக் கூறினாள்  ரத்தினவல்லி. இதையடுத்து சிவனை வேண்டி  பதிகம் பாடி, இறந்தவனை உயிர்பித்து அறிளினார் திருஞானசம்பந்தர்.

பின்னர் திருப்புறம்பியம் கோவில் மடப்பள்ளி அருகே உள்ள வன்னி மரத்தடியில் கிணற்றின் அருகில் சிவபெருமானின் முன்பு திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் ரத்தினவல்லி கணவனின், முதல் மனைவி , திருமணம் நடந்தது உண்மையல்ல என்று மறுத்ததுடன், ரத்தினவல்லி பற்றி ஊராரிடம் அவதூறு பரப்பினாள். இதனால் மனமுடைந்த ரத்தினவல்லி  திருபுறம்பியம் சிவனிடம் வேண்டினாள். அவள் துயர்போக்கும் வகையில் சிவபெருமான் சாட்சியாக வந்து ஊராருக்கு உண்மை உரைத்தார் அதனால் அவர் சாட்சிநாதர் ஆனார்.

பிரளயம் காத்த விநாயகர்

இந்த தலம் சிவ தலமாக விளங்கினாலும் , இங்கு கொலுவிருக்கும் விநாயகர் பிரசித்து பெற்றவர். கிருதாயுகத்தின் முடிவில் பிரளயம் ஓன்று உருவானது, அதில் இருந்து அந்த பகுதி மக்களை காத்தருள சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார் அத்துடன் பிரளயத்தில் இருந்து மக்களை காத்தருளும் பொறுப்பை விநாயகப் பெருமானை அழைத்து வழங்கினார்

ஓங்காரத்தை பிரயோகம் செய்த விநாயகர் சப்த சாகரத்தின் (எழுகடல்) பெருக்கையும், ஒரு கிணற்றில் அடக்கினார்  அப்போது வருணபகவான் தன்  திருமேனியில் இருந்து சங்கு, நாத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் விநாயகரை பிரதிஷை செய்து அவருக்கு 'பிரளயம் காத்த விநாயகர்' என்று பெயரிட்டு போற்றி வழிபட்டார்.

தேனை உறிஞ்சும் அதிசயம்

சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் மேனியில் நிறைய கிளிஞ்சல்களை இந்த தலத்திற்கு வந்தால் காணலாம். இந்த கோவிலின் அருகிலேயே ஏழு கடல் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்தன நிற விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி தினந்தன்று இரவு மட்டும் தேன் அபிஷேகம் நடைபெறும். மற்றபடி  எந்த நாளும் இவருக்கு அபிஷேகம்  நடைபெறாது.

சதுர்த்தி அன்று இரவு முழுவதும் விநாயகருக்கு தேன்  அபிஷேகம் செய்யப்படும். அப்போது ஆபிஷேகம் செய்யப்படும்  தேன் முழுமையாக விநாயகரின் திருமேனியால்  உறிஞ்சப்பட்டு விடும். இந்த காட்சியை காண, விநாயகர் சதுர்த்தி தினத்தில் இத்தலத்திற்கு  வருபவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. தேன் அபிஷேகத்தின்  போது சந்தன நிறத்தில் இருந்து விநாயகர் செம்பவள மேனியில் பளபளப்பார். இந்த அபிஷேக நேரத்தின் பொது பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து காரியங்களும், அடுத்த ஆண்டு அபிஷேகத்திற்க்குள்  நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கை.

நாமும் வழி படுவோம் தேனுறிஞ்சி விநாயகரை
வாழ்வில் வளம் பெறுவோம் 

No comments:

Post a Comment