அதிசய சிவன் ஸ்தலங்கள் ...
...
ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.
சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.
எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம். உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.
பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும்.
"விஸ்வநாதர் கோயில்"காசி!
இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள். அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.
கேரள மாநிலம், திருச்சூர் - எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர் 'திருக்கூர்'. இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.
மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.
மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.
சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment