ஸ்ரீ ராமர் பாதம்பட்ட புண்ணிய ஸ்தலங்கள்
ஸ்ரீ ராமர் கலடியாகவே அயோத்தி முதல் ராமசேது தாண்டி இலங்கை வரை
யாத்திரை புரிதுள்ளார் அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்.
1) அயோத்யா:- இது ராம ஜெனம் பூமி, இந்துக்களின் புனித பூமி. துளசி
தாசர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம்
அளித்த நாம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம். வாரணாசி
லக்னோ மார்கத்தில் அயோத்ய ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியில்
இருந்து 189 கிலோமீட்டர், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர்.
2) பக்ஸர்:- சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு
பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு
பலா, அதிபலா ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது.
கிழக்கு ரயில்வேயின் பாட்னா மொகல்சராய் ரயில் மார்க்கம்.
3) ஜ்னக்பூர்:- மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதமடி -
ஜனக்பூர் சாலையிலிருந்து 36 கிலோமீட்டர்,. இங்குள்ள பெரிய
மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.
4) பரத்வாஜ ஆசிரமம்:- ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து
ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம்
பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது.
ப்ரயாகை தீர்த்தராஜபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது
அலகாபாத்.
5) வால்மீகி ஆசிரமம்:- ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய
வால்மீகி முனிவர் வழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்க்கே 30 கிலோமீட்டர்
கான்பூரில் பிடூரில் கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் என்று
இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமம் என்று கூறுகின்றனர்.
6) சித்ரகூடம்:- ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்
ஜபல்பூர் ரயில் மார்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷனிலிருந்து 36
கிலோமீட்டர்.
7) அனஸூயா ஆசிரமம்:- ரிஷி பத்தினி அனஸூயா வசித்த இடம். சித்ர
கூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
8) ஸூதீக்ஷ்ண ஆசிரமம்:- வீரசிங்கபுரத்திளிருந்து 22 கிலோமீட்டர்,
சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர், ஜைத்வாரா ரயில்
நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கப்புரம்.
9) அகஸ்தியாசிரமம்:- குந்தாபூர் கோகர்ண மார்கத்தில் உள்ள
கங்கோலியிலிருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மழைத் தொடரைக்
காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான்
கடல் அருகே அகஸ்தியாசிரமம் உள்ளது.
10)ராம்டேக் :- இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால்
சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது
என்று பொருள். ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின்
போது சிறிது காலம் தங்கி இருந்ததால் இது புண்ய ஸ்தலமாக
கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் சிவனி மார்கத்தில்
தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் அருகில் உள்ள இடமே ரம்டேக்.
நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்.
11)பஞ்சவடி:- ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது
விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக
முக்கியமான இடம். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில்
த்ராயம்பகேஸ்வரத்திலிருந்து கோதாவரி தோன்றுகிறது . சென்ட்ரல்
ரயில்வேயின் மும்பை புசாவல் தடத்தில் நாசிக் ரோட்டிலிருந்து
8 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.
12)சபரி ஆசிரம:- சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை
ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜய நகர
சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புறாதான் நகரம் ஹம்பி ஆகும்.
இது 36 கிலோமேடேர் விஸ்தீர்ணத்தில் பரவிய பெரிய நகரம். நகர
மத்தியில் விருபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி
கோலாகலத்துடன் துள்ளி வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர்.
இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீராமர் ஆலயம் இருக்கிறது.
இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான்
மதங்க முனிவர் வசித்து வந்தார். இவர் ஆசிரமத்திற்கு அருகேதான்
சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
13)கிஷ்கிந்தா:- கர்நாடகம் ஹூப்ளி கதக் பெல்லாரி மார்க்கத்தில்
ஹான்ஸ்பேட், பெல்லாரியில்ருந்து 65 கிலோமீட்டர், ஹூப்ளியிலிருந்து
145 கிலோமீட்டர் தூரம், கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரம்.
இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி, ஹாஸ்பேட் விஜய
நகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி. இதை ஒட்டிய பகுதியே
கிஷ்கிந்தா, இதை ஆண்டவர் ஸூக்ரீவ மஹாராஜா.
14)ருஸ்யமுகம்:- கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில்
அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்க்கு 3 கிலோமீட்டர் தூரத்தில்
பம்பா சரோவர் ள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம்
ஆகும்.
15)ராமேஸ்வரம்:- ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும்
செனையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி
18 கிலோமீட்டர் தூரம்.
16)ராமஸேது:- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா
ஜெமினி 11 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம்
1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ராமேஸ்வரம் ஸ்ரீலங்கா
இடையே அமைந்துள்ள பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது
ஒப்பற்ற தனித்தன்மையுடய வளைவுடன் கூடிய மனிதனால்
அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பலம்தான் ராமசேது
(நாஸா எடுத்த இந்தப் படத்தை 1993ம் ஆண்டு டில்லி பிரகாத்தி
மைதானத்தில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில்
பிரதானமாக வைத்திருந்தது குறிப்பிடத் தகுந்தது ) இதன் மீது நடந்தே
ராமர் தன் சைனியத்துடன் இலங்கை சென்றர்.
17)இலங்கை:- குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு.
அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான்.
பத்துத் தலைகளுடன் கூடிய அவனை வீழ்த்தி சீதா தேவியை
அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து
அயோத்திக்கு திரும்பினார்.
ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும்
ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபிய, பல்கேரியா நாடுகளிலும்
பரவி உள்ளது. பர்மிய,கம்போடிய, சீன செக், எகிப்திய, ரஷ்ய, ஆங்கில
மொழிகள் போன்ற ஏராளமான மொழ்களிலும் ராமாயணம் மொழி
பெயர்க்கப் பட்டுள்ளது.
ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ, மாற்றவோ
மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா
முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவி உள்ளன. இவற்றில்
முக்கியமான சிலவற்றயே மேலே பார்த்தோம்.
மர்யாதா புருஷோதமான ராமன் தன் ஜீவியத்தால் வாழ்க்கை முறையை
காண்பித்தார். இது கர்மயோகம்
தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறார் இது பக்தியோகம்
தனது அகண்டாகாரப் பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறார்.
இது ஞானயோகம்.
'ராம' மந்திரம் சொன்னால் பட்டமரமும் தளிர்க்கும். இந்த மந்திரத்தை
சொல்லத் தெரியாமல் 'மரா' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான்
ராமாயணத்தின் ஆசிரியரானார். காசியில் இறப்பவர்களின் காதில்
சிவபெருமான், ராம' மந்திரத்தைச் சொல்லி அவர்களுக்கு பிறப்பற்ற
நிலையை அருளுகிறார்.
நாமும் இன் நன்னாளில் இருந்து தினமும் 'ராம, ராம, ராம' என்ற தாரக
மந்திரத்தைச் சொல்லிப்பழகுவோம். இம்மந்திரத்தைச் சொல்வோரை
கண்மணி போல் பாதுகாப்பார் எம்பிரான் ஸ்ரீராமர்.

No comments:
Post a Comment