Saturday, November 22, 2014

கெளரி கல்யாண வைபோகமே


கெளரி கல்யாண வைபோகமே (Gowri kalyaana vaibogame)

தைபிறக்கப்போகுது,இல்லத்தில்திருமணங்கள் 
கூடிவரும்நேரம்,இதுஒருமுக்கியமான பாடல்,பலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு மறந்திருக்கும், சிலருக்கு தெரியவே தெரியாது  அனைவருக்கும் நினைவுகூறும் வகையில்,  படித்து,பத்திரப்படுத்திமகிழுங்கள்

 
விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து

பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times

சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா -

கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி

கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள் (Maalai saarthinaal)

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

மன்மதனுக்கு மாலையிட்டாயே (Manmadhannuku Malaiyittaye)

மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி

மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனை கைபிடித்து
கனகநோன்பு நோற்றதுபோல்
கிடைத்தது பாக்யமடி

செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்ததுபோல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி

கன்னூஞ்சல் (Kannoonjal)

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் -

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

ரத்ன ஊஞ்சல் (Ratha Oonjal)

ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே

மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே (Anandam Anandam Anandame)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்
நாம் செய்த பூஜா பலமும்
இன்று பலித்ததம்மா - ஆனந்தம்

நலங்கிட வாரும் ராஜா (Nalangida Vaarum Raja)

நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன்

நலங்கிடுகிறாள் மீனலோசனி (Nalangidukiral Meenalochani)

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி

நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட

சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள்

போஜனம் செய்ய வாருங்கோ (Bhojanam Seyya Varungo)

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ

சித்ரமான நவ சித்ரமான்
கல்யாண மண்டபத்தில்
வித விதமாகவே வாழைகள் கட்டி
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
பச்சை மரகதங்கள் தளகதி செய்களும்
முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்க
மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட
அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா
த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
இந்திரதேவி ரம்பை திலோத்தமை
கந்தர்வ பத்தினி கின்னர தேவி
அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே
சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து
பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார்

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்க

No comments:

Post a Comment