அரிய அதிசய தகவல்கள்
1. மீரா கட்டிய கோவில்
கண்ணனுக்காக மீரா கட்டிய கோவில் ஒன்று இராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் எனும் நகரில் உள்ளது . லோவில் கட்டி முடிந்த பின்னும் கிருஷ்ண விக்ரகத்தை பிரிய மனமில்லாத மீராபாய் அதை கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தாராம். முடிவில் கிருஷ்ண விக்ரகத்தை தழுவிய படியே இறைபாதம் அடைந்தார். பிறகு உதயபுரி மகராஜாவின் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு கிருஷ்ண விக்ரகம் அங்கேயே சிலகாலம் கொலு வீற்றிருந்தது. இதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோதித்து இது மீரா காலத்து விக்ரகம் என்றனர். பிறகு இதை மீரா கட்டிய கோவிலில் 1969ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2. அனுமனின் வெள்ளிக் கோல்
குஜராத் மாநிலத்தில் சாரங்பூரில் கோவில் கொண்டுள்ள ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. பேய் பிசாசு பில்லி சூனியம் போன்ற துர்ச்சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் அவர் கையிலுள்ள வெள்ளிக்கோலை எடுத்துத் தடவினால் அந்த பாதிப்புக்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
3. அஷ்ட லட்சுமியரும் ஐக்கியம்
சென்னை பூந்தமல்லியை அடுத்து திருமழிசையில் உள்ளது வீற்றிருந்த பெருமாள் கோவில். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் அஷ்ட லட்சுமிகளும் இந்தப் பெருமாளிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெருமாளின் மார்பில் இருவர் , சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர். பெருமாளின் இருபுறமும் பக்கத்திற்கு ஒருவர் என்று அஷ்டலட்சுமியருடன் அருள்கிறார். சனிக்கிழமைகளில் இந்த பெருமாளை துளசிமாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்கிறார்கள்.
4. ஒரு பீடம் இரண்டு அம்மன்கள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மனும் காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அபூர்வ தரிசனம் தருகின்றனர். பெண்கள் இவர்களிடம் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றனர். அம்பாளை வேண்டி குழந்தை பெற்றவர்கள் கோவில் ஆண்டுத் திருவிழாவில் தங்கள் குழந்தையுடன் பூக்குழி நடுவில் நின்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்த பாலைப் புகட்டுகின்றனர். இவ்வாறு செய்தால் தங்கள் குழந்தைகளை அம்பாள் தனது குழந்தைகளாக பாவித்து நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வைப்பாள் என்பது நம்பிக்கை.
5. பஞ்ச மூர்த்தி தரிசனம்
திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகளையும் தரிசிக்கலாம். இந்த விழாவில் முருகப்பெருமான் முன்புறம் ஆறுமுகத் தோற்றத்துடனும் பின்புறம் நடராஜர் தோற்றத்துடனும் தங்கப் பல்லக்கில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு.
6. அடைக்கலம் தந்த அம்பாள்
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில். அங்குதான் கண்ணகியை இடைச்சி அம்மனிடம் கோவலன் அடைக்கலமாக விட்டுச் சென்றான். அப்போது பொற்கொல்லர் தெரு இங்குதான் இருந்ததாம். இடைச்சி அம்மன் கோவிலைத்தான் செல்லத்தம்மன் கோவில் என்று அழைக்கின்றனர்.
7. நந்தி தேவர் மகிமை
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் தளத்தில் நந்திதேவர் அவதரித்தார் என்றும் தமிழகத்தில் திருவையாறில் நந்திதேவர் அவதரித்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம் இவரது அவதார தினம். எனவே அன்று நந்திதேவர் ஜனன உற்சவம் இத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாட[ப்படுகிறது. பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்ம நந்தி நாக நந்தி விநாயக நந்தி மகா நந்தி சோம நந்தி சூரிய நந்தி கருட நந்தி விஷ்ணு நந்தி சிவ நந்தியாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால் ஸ்ரீ சைலம் தலங்களில் தரிசிக்கலாம்.
8. தினம் ஒரு நிறம்
துவாரகா கிருஷ்ணருக்கு பிரதி திங்கட்கிழமை ரோஜா செவ்வாய்க்கிழமை சந்தனம் புதன் பச்சை வியாழன் கேசரி வெள்ளி வெள்ளை சனிக்கிழமை நீலம் ஞாயிறு சிவப்பு நிறங்களில் அலங்காரம் செய்கிறார்கள்.
சௌபாக்கிய துர்க்கை
சிவன் கோவில்களில் துர்க்கை பொதுவாக வடக்கு நோக்கி இருப்பாள். திருவெண்காட்டில் துர்க்கை மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறாள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க இத்தளத்தில் சிவனை வழிபட்டாள் துர்க்கை எனவே இவளுக்கு மூலஸ்தான அம்பிகையின் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இவள் சௌபாக்கிய துர்க்கை என்றழைக்கப்படுகிறாள்.
No comments:
Post a Comment