Monday, November 10, 2014

எந்த திதியில் என்ன செய்யலாம் ?

 பிரதம திதியில்:- அதிபதி :- அக்னி பகவான்  

பிரதம திதியில் செய்ய தக்க கார்யம்  

உலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும் 

துதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை  

துதியை திதியில் செய்ய தக்க கார்யம்  விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது! 

திருதியை திதி:- அதிபதி :-பார்வதி 

 திருதியை திதியில் செய்ய தக்க கார்யம் வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹபிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!

 சதுர்த்தி திதி:- அதிபதி :-கஜநாதன் [விநாயகர்]  

 சதுர்த்தி திதியில் செய்ய தக்க கார்யம்

சதுர்த்தி திதியில் வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்க்கு விதி விலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்க்கு விதி விலக்கு ] 

 பஞ்சமி திதி:- அதிபதி :-சர்ப்பம் 

பஞ்சமி திதியில் செய்ய தக்க கார்யம் 

இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !

 சஷ்டி திதி:- அதிபதி :-முருகன் 

சஷ்டி திதியில் செய்ய தக்க கார்யம் 

வேலைக்கு சேர,பசுமாடு வாங்க,வீடு வாங்க, வாகனம் வாங்க , மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொதுகணக்கு!

 சப்தமி திதி:- அதிபதி :- சூரியன் 

 சப்தமிதிதியில் செய்ய தக்க கார்யம் வீடுகட்ட,உபநயனம்,விவாஹம்,தேவதாபிரதிஸ்டை,இடம்மாற்றம்,விவசாயம்,துவிதியை,திருதியை பஞ்சமி திதிஒயில் சொல்ல பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர்கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி! 

 அஷ்டமி திதி:- அதிபதி :- சிவபெருமான்  

அஷ்டமிதிதியில் செய்ய தக்க கார்யம் 

யுத்தம், தான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!

 நவமி திதி:- அதிபதி :-பாராசக்தி  

 நவமிதிதியில் செய்ய தக்க கார்யம்

 பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க  அதிக தோசம் உள்ள திதி அல்ல இது! 

தசமி திதி:- அதிபதி ஆதிசேஷன் தசமி திதியில் செய்ய தக்க கார்யம் தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி ,  மங்களகரமான கார்யம், ஜலம், முக்கியஸ்தரை சந்திக்க உகந்தது இந்த திதி ! 

ஏகாதசி திதி:- அதிபதி:- தர்ம தேவதை

 ஏகாதசி திதியில் செய்ய தக்க கார்யம் 

பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம்,விவசாயம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!  துவாதசி திதி:- அதிபதி:-விஷ்ணு   துவாதசி திதியில் செய்ய தக்க கார்யம் விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது,சுபசெலவுகள்,தர்மகார்யம்,நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம் [ 
திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது ]    
திரயோதசி திதி:- அதிபதி:- மன்மதன்  

திரயோதசி திதியில் செய்ய தக்க கார்யம் 

வ்குகாலம் நிலைக்கும் அனைத்தும், செளபாக்கியமான மங்களகரமான கார்யம் ,நாட்டியம்,  ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்! 

சதுர்தசி திதி:- அதிபதி:- கலிபுருஷன்

 சதுர்தசி திதியில் செய்ய தக்க கார்யம் 

வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்! தேய்பிறையில் சிவ பெருமானை  வணங்கி வர வேண்டும்! பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை மற்றும் சுக்கில பட்ஷம் எனும் வளர்பிறையில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகார்யம் தவிர்க்க

 [ அமாவாஸைக்கு முதல் நாளில் ]    

அமாவாஸையில் முன்னோர்மற்றும் இறந்தவர்களுக்கு உண்டான கார்யம் மட்டும் செய்யவும்!  பெளர்ணமியில் செய்ய தக்கவை  கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும் ,யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்

  [குறிப்பு:-  இவை அனைத்தும் பொதுவாக பஞ்சாங்கத்தின் அடிப்படை மட்டுமே! தேவையற்ற கேள்விகள் எம்மால் பதில் செய்ய இயலாது! எம்மிடம் கேட்பதற்க்கு பதில் நீங்கள் பஞ்சாங்க வெளியீட்டாரிடம் கேட்டு எனக்கும் சேர விளக்கம் தரவும் நன்றி ]  

No comments:

Post a Comment